தமிழகத்தில் +2 பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மார்ச் 24 வரை நடைபெறும் இந்த தேர்வுகளில் பல லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் தொற்றிக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. நன்றாக படித்த மாணவர்களும் கூட பதட்டத்தால் தேர்வு அறையில் பல விடைகளை மறந்து விடுகின்றனர்.
மேலும் தேர்வு எழுதிய பிறகு பல மாணவர்கள் ஃபெயில் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்வது, ரிசல்ட் வரும்போது ஃபெயில் ஆகியிருந்தால் தற்கொலை முயற்சி செய்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்காக தேர்வு காலங்களில் பல உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருகின்றனர்.