பள்ளி முடிந்ததும் மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி பெறலாம் என்றும், மாணவர்கள் யாரையும் கட்டாயப்படுத்த கூடாது எனவும் தொழிற்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
எனவே நீட் விலக்கு என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், நீட் விலக்கு வரும் வரை காத்திருக்காமல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சியில் எடுபட வேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீட் பயிற்சி பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.