இனிமேல் அறிவுரைகள் இல்லை, கைது தான்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரயில்வே ஏடிஜிபி..!

புதன், 1 நவம்பர் 2023 (07:30 IST)
ரயில்வே சாகசம் செய்ய மாணவர்களுக்கு இனிமேல் அறிவுரை கூறி பயனில்லை என்றும் அடுத்த கட்டமாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே ஏடிஜிபி வனிதா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

பெரு நகரங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படிக்கட்டுகளில் நின்று கொண்டு பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்ப்பது உள்பட பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே பலமுறை மாணவர்களுக்கு அறிவுரை கூறியும் அவர்களுடைய பள்ளி கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தும் எந்த விதமான பயனும் இல்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே ஏடிஜிபி வனிதா அவர்கள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயுதங்களுடன் வன்முறை மற்றும் சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி பலன் இல்லை.

இதையடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி கல்லூரியில் இருந்து சாகசம் செய்யும் மாணவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்