மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரான நடராஜன் விழா ஒன்றில் பேசிய போது தனக்கு பத்மா மற்றும் ரத்னா விருதுகள் வழங்க அனுகியதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் பழனிகுமணனுக்கு பொருளாதாரத்தில் சிறந்த கட்டுரைகளை எழுதியதற்காக அந்நாட்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மதுரையில் நேற்று பாராட்டு விழ நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், நம்ம ஊரில் விருதுகள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்படுபவை. ஆனால் அமெரிக்காவில் அப்படி விலைகொடுத்து வாங்க முடியாது. என்னிடம் கூட ஒரு பத்மா, ரத்னா விருதை தருவதாக அணுகினார்கள். நான் அதனை தவிர்த்துவிட்டேன் என்றார்.
மேலும் நெடுமாறன் தந்தை காந்தியை வழிமறித்து தனது தங்க மோதிரத்தை கழட்டிக் கொடுத்துவிட்டு, காந்தியின் கோர்ட்டை வாங்கிப் போட்டவர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இந்த பழனிக்குமணன்.
நோபல் பரிசு உள்பட இன்னும் பல விருதுகலை பெற தமிழகர்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழ்ச் சங்கம் வளர்ந்த மதுரையில் ஒரு தமிழன் அமெரிக்காவில் விருதை பெறுவது தமிழுக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் கிடைத்த பெருமை என்று நடராஜன் பேசினார்.