முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: 6 பேர் கைது !!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (10:02 IST)
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது. 

 
ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் நடைப்பெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் உடனடியாக சிசிடிவி மூலம் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 
 
விசாரணையின் முடிவில் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்வர்களில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேரிடமிருந்து ரூ.12 கோடி நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்தி பறிமுதல் செய்துள்ளனர். 
 
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்