ஓபிஎஸ் அணிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் சொல்லிய வைத்திலிங்கம்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:06 IST)
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கான முயற்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து கொண்டே வருகிறது.


 
 
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் ஓபிஎஸ் அணி ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்கு அமைத்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்கு அமைத்துள்ளது.
 
ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறுமுன்னரே இரு அணியினரும் ஊடகத்தை சந்தித்து பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பேசி வருகின்றனர். இதனால் இழுபறி நிலையிலேயே உள்ளது அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை.
 
இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. வைத்திலிங்கம் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் அணிக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.
 
ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என அறிவித்த வைத்திலிங்கம் தனது செல்போனை எடுத்துக்காட்டி பேச்சுவார்த்தை தொடர்பாக எஸ்எம்எஸ் அனுப்பினோம், ஆனால் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை என்றும், நாங்கள் எஸ்எம்எஸ் அனுப்பியது தொடர்பாக மனோஜ் பாண்டியன் எதுவுமே செய்தியாளர்களிடம் பேசவில்லை என கூறினார்.
அடுத்த கட்டுரையில்