பிரதாப் ரெட்டி அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்கு இதுதான் காரணம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:30 IST)
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிக்கிசை அளிப்பதால், அப்பல்லோவின் பிசினஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா வீட்டுக்கு திரும்புவதுதான் நல்லது என்றும் பிரதாப் ரெட்டி கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுவரை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அவரது உடல்நலம் குறித்து அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
 
சமீபகாலமாக, ஜெயலலிதா உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடும் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் எப்போது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்.
 
இதற்கு பிண்ணணியில் சசிகலாவின் செயல்பாடு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த 2 மாதங்களாக பிரதாப் ரெட்டியில் பிசினஸ் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாம். மருத்துவமனை முன் குவிந்து இருக்கும் அதிமுக கட்சியினரால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாம்.
 
வெளிநாட்டு நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்காக குறிக்கப்பட்ட தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். அதோடு, ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எவ்வளவு சிகிச்சை அளிக்க முடியுமோ, எல்லா சிகிச்சையும் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.
 
இந்நிலையில் அவரை மருத்துவமனையில் இருந்து மாற்றிவிடுவதுதான் மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் சிக்கிசை பெரும் நோயாளிகளும் நல்லது என்று பிரதாப் ரெட்டி கருதவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்