நெல்லை பள்ளி விபத்து: மாணவர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:07 IST)
நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

 
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் மேலும், ஒரு மாணவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் நெல்லை பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
 
மேலும் காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்