மன்னாதி மன்னர்.. நம்பர் 1 முதல்வர் எடப்பாடியார்! – பாராட்டி தள்ளும் அமைச்சர்கள்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:01 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகள் குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக பல காலமாக நடைபெறாமல் இருந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் கொரோனாவால் உயிரிழந்த சட்டசபை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் பேரவையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கொரோனா பாதிப்பில் முதல்வர் மிக கவனமாக செயல்பட்டிருப்பதாக பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் ”முதல்வர் எடப்பாடியார் மன்னாதி மன்னன். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே சிறப்பாக செயல்பட கூடிய நம்பர் 1 முதல்வர், நல்லாட்சியால் தமிழகத்தை உயர்த்த வந்த விவசாயி” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

அதேபோல அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் “நாடே கொரோனா பாதிப்பால் முடங்கி கிடந்த போதும் பம்பரம் போல சுற்றி வந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தியவர் முதல்வர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்