இந்த சூழலில் சில அமைச்சர்கள் நாங்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை எனவும், அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது எல்லாம் பொய். சசிகலா தான் அவ்வாறு சொல்லச் சொன்னார் என கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது தான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்ததாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, சர்க்கஸ் கோமாளிகளைப்போல் மாறுப்பட்ட கருத்தை அமைச்சர்கள் பேசுகின்றனர். இதனால் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிவரும். யாரும் சட்டத்தை மதிப்பதாக தெரியவில்லை.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் வைத்து உத்தரவிட்டுள்ளது கண் துடைப்பு மட்டுமே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். யார் தவறு செய்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.