ஜெயலலிதா அப்பல்லோவில் திராட்சை சாப்பிட்டார்: இது புதுசு!

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:41 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது எல்லாம் பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.


 
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை அடுத்து தமிழக அரசியலில் தற்போது வரை பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என சொன்னது எல்லாம் பொய் என அமைச்சர் கூறியுள்ள நிலையில் தற்போது அவர் திராட்சை சாப்பிட்டார் என்ற புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.
 
இந்த திராட்சை சாப்பிட்ட தகவலை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவரது பேட்டியில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்தே அவரை பார்த்ததாக கூறியுள்ளார்.
 
மூன்றாவது நாள் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார், அவர் திராட்சை சாப்பிட்டதை நேரில் பார்த்தேன், ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ஜெய் ஹனுமான் தொடரை அவர் பார்ததாகவும் மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கவில்லை எனவும் சசிகலா குடும்பமே அங்கு இருந்ததாக கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. நுரையீரல் தொற்று உள்ளவர்கள் திராட்சை சாப்பிடக்கூடாது. ஆனால் தீபக் தனது பேட்டியில் ஜெயலலிதா திராட்சை சாப்பிட்டதை நேரில் பார்ததாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்