ஒரு முறை மட்டுமே இலவச பயிற்சி: செங்கோட்டையன்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (12:01 IST)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி என அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தபோதிலும், மத்திய அரசு இந்த தேர்வை விடாப்பிடியாக நடத்தியது.  இதன் முடிவுகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் தனது சமீபத்திய பேட்டியில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே அரசு இலவச பயிற்சி அளிக்கும். 2 ஆம் முறை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தனியார் மூலம் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்துள்ளார். 
 
மேலும், பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என்றும் பள்ளிகள் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்