மீண்டும் பள்ளி பொதுத்தேர்வுகள் ரத்தா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:41 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மீண்டும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் பல பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தி வருகின்றன. எனினும் பல மாணவர்கள் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளை படிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

முன்னதாக பாடத்திட்டத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசித்து வந்த நிலையில் மாணவ்ர்களுக்கு பொதுத்தேர்வுக்கு இன்னும் 4 மாதங்களுக்கு குறைவான அவகாசமே உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு போதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை நடத்துவது குறித்து டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். தமிழக அரசு என்ன அறிவிப்பு வெளியிட போகிறது என மாணவர்கள், பெற்றோர்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்