அப்பொதெல்லாம் பேசாத ரஜினி, இப்போது அரசியல் பேசுவது ஏன்?-அமைச்சர் கேள்வி

Webdunia
சனி, 20 மே 2017 (14:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரத்தில் பேச  ஆரம்பித்தாரோ, அந்த நேரம் முதல் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் எளிதில் வெற்றி வாகை சூடிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சின்ன சின்ன கட்சிகளுக்கு ரஜினியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இந்த நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலு மணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து நேற்று பேசினார்.  அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சியை பற்றி ரஜினி கூறிய கருத்து தவறானது. காவிரி பிரச்சினைக்காக நடிகர் சத்யராஜ் குரல் கொடுத்ததால்தான் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது எனக் கூறி  கர்நாடகாவில் சத்யராஜிக்கு எதிராக போராட்டம் நடந்தது.  அந்த சமயத்தில் ரஜினி குரல் கொடுத்தாரா?. அப்பொதெல்லாம் பேசாத ரஜினி, இப்போது அரசியல் பேசுவது ஏன்? என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்