தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றபோது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் பல மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றிய தாகவும் அந்த வகையில் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றிய பத்தாயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்றுதான் தேர்வு முடிவுகள் வரும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். தாமதமாக வந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அதனால் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்