தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்லும் மக்கள்! – அமைச்சர் போட்ட புதிய உத்தரவு!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (14:52 IST)
சுதந்திர தினம் காரணமாக தொடர் விடுமுறை இருப்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் போக்குவரத்து அமைச்சர் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஆகஸ்டு 15 திங்கட்கிழமை அன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை உள்ள நிலையில் திங்கட்கிழமையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையிலிருந்து செல்லும் அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இதை வாய்ப்பாக பயன்படுத்தி தனியார் ஆம்னி வாகனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக புதிய உத்தரவிட்டுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்