இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், 2டி தயாரிப்பில் வரும் படம் என எதையும் திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தனர். இதனால் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இது குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை. இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன்.