இந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பெற்றோர்களைப் பார்க்க பாண்டியின் மகன்கள், மகள்களால் முடியவில்லை. இந்த நிலையில் தனியாக இருக்கும் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் மனைவிக்கு உடல்நலம் இல்லாமல் இருப்பதாகவும் பிள்ளைகளிடம் போன் மூலம் பாண்டி கூறியுள்ளார்
இதனை அடுத்து பிள்ளைகள் அருகில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து பெற்றோர்களின் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஒருசில நாட்கள் கழித்து மீண்டும் தான் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக தனது மகளிடம் பாண்டி கூறியுள்ளார். இதனை அடுத்து பாண்டியின் மகள் அரசின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் பெற்றோருக்கு உணவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் இதனையடுத்து அந்தப் பகுதியில் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பாண்டியின் வீட்டிற்கு உணவு எடுத்துச் சென்றனர்
ஆனால் அங்கு சென்று பார்த்தபோது பாண்டியின் மனைவி ஆண்டாள் இறந்து இரண்டு நாட்களாகியுள்ளதையும், வீட்டில் துர்நாற்றம் அடித்ததைதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பாண்டி மனைவி ஆண்டாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் அவருக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த கணவரின் மனநிலை குறித்து தற்போது சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது