திமுகவிற்கு சனி பிடித்து விட்டது... ஜெயகுமார் கணிப்பு!!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (12:44 IST)
திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
அமைச்சர் ஜெயகுமார் தனது சமீபத்திய பேட்டியில், ஆண்டுதோறும் ரூ.70,000 கோடி வரை சமூகநலன்களுக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் இன்று சாத்தான் வேதம் ஓதுவது போல ஊழல்... ஊழல்... என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். இப்போதைக்கு திமுகவின் நம்பிக்கை பிரசாந்த் கிஷோர் தான், முக ஸ்டாலின் அல்ல. ஆனால் அதிமுகவின் நம்பிக்கை தமிழக மக்கள் மட்டுமே.
 
தமிழக உரிமைகளை காவுகொடுத்தவர்கள் திமுக தான். திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது. நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஜெயலலிதா கூறியபடி, அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் தாண்டியும் தழைத்திருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்