புதுவையில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை செய்யும் தமிழிசை: தமிழகத்திலும் கிடைக்குமா?

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:50 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி அரசின் கடைகளில் முக கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது 
அதன்படி முகக்கவசம் ஒரு ரூபாய்க்கும், சானிடைசர் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.,
 
மேலும் அவர் மாஸ்க் அணிவது குறித்து கூறுகையில் ’புதுவையில் உள்ள அனைத்து மக்களும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தால் கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியாக உள்ளே செல்ல வழியில்லை. அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் மாஸ்க் அணிந்து இருந்தால் வெளியே வராது. எனவே கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது ஒன்றே இப்போதைக்கு சிறந்த வழி. அதனால்தான் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதால் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார் 
 
இதே போல் தமிழக அரசும் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்