கரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து பலி : கணவரே கொன்றாரா?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (18:17 IST)
கரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபப்பு ஏற்படுத்தியுள்ளது.


 

 
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள நெடுங்கூர் கிராமத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் வசித்து வந்தவர் தண்டபாணி, இவரது வீட்டில் வசித்து வந்த சண்முகம், இதே பகுதியில் உள்ள ஒமேகா புளுமெட்டல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் சண்முகத்திற்கும்,  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, பாலப்பட்டி கிராமம், வள்ளிப்பட்டி பகுதியை சார்ந்த செல்வியின் மகள் சங்கீதா (வயது 25), என்ற பெண்ணை கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். 
 
அவ்வப்போது கணவன், மனைவிக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சங்கீதாவை அவரது கணவர் கொலை செய்து விட்டு அந்த கொலையை மறைப்பதற்காக அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி விட்டு தீக்குளித்து இறந்ததாக கூறி நாடகமாடியதாக சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அவரது தாயார் புகார் கூறி க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
மேலும் இன்று காலை சங்கீதாவின் பிரேதம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு வந்த போது, சங்கீதாவின் இறப்பில் நீதி வேண்டுமென்று கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதையடுத்து, கோட்டாட்சியரும், காவல் துறையினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து இது கொலையா? தற்கொலையா? என்ற விசாரணை நடத்துவோம் என்று கூறினர். 
 
கரூர் கோட்டாட்சியர்(பொ) சக்திவேலு, க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சமாதானப்படுத்தியதையடுத்து பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தால் கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் பெரும் பரபரப்பு நீடித்தது.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்