இங்கு வெங்காயம் 60 ரூபாய்க்குக் கிடைக்கும் – கும்பகோணத்தைக் கலக்கிய அதிசய மனிதர் !

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (14:07 IST)
வெங்காய விலை கிலோ 200 ரூபாயை நெருங்கியுள்ள வேளையில் வெறும் 60 ரூபாய்க்கு விற்று அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு நபர்.

வெங்காய உற்பத்திக் குறைவு காரணமாக விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக அதிசயப்படவைக்கும் கும்பகோணம் அடுத்துள்ள பானாதுறையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி என்பவர் மொத்தமாக வெங்காயத்தை வாங்கி அதைக் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள் அவரிடம் வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்