கிருஷ்ணகிரி அருகே முதலாளியின் மனைவியுடன் கொண்ட கள்ளக்காதலால் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
தளி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் திரிவேணி என்ற பெண்ணை காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இந்நிலையில் அனில் குமார் வேலை பார்த்த இடத்தில் முதலாளியின் மனைவியுடன் உறவில் இருந்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ரகசியமாக இருக்க ஒரு நாள் போதையில் அனில் குமார் தன் மனைவியிடம் இதனை உளறியுள்ளான். அன்று முதல் ஒரே பிரச்சனை இருவருக்கும் இடையே. முதலாளியின் மனைவியை வீட்டிற்கே அனில் குமார் கூட்டிக்கொண்டு வர திரிவேணி சண்டைப் போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் மனைவி திரிவேணியை சமாதானம் பேசி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர் திரிவேணியை யாருமே பார்க்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த திரிவேணியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் விசாரித்த போது திரிவேணியை கொலை செய்து வீட்டிலேயே புதைத்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் அனில் குமார். அதன் பின்னர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து எரித்தனர். அனில் குமாரை கைது செய்து தீவிர காவலில் எடுத்துள்ளனர் போலீசார்.