மூளைச்சாவடைந்த பிரபல நடிகர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (12:54 IST)
மறைந்த மலையாள நடிகர் வின்சென்டின் மனைவி சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.



பிரபல மலையாள நடிகர் வின்சென்ட். இவர் 1991-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மனைவி மேரி (54). சென்னை முகப்பேரில் வசித்து வந்தார். இவருக்கு ராபின், ரிச்சர்டு ஆகிய மகன்கள் உள்ளனர். மேரி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி திருமங்கலத்தில் சாலையை கடக்க முயன்ற மேரி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் மேரி நேற்று முன்தினம் நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மகன்கள் முடிவு செய்தனர். அதன்படி மேரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டிவந்த முகப்பேரை சேர்ந்த பாலாஜி (18) என்பவரை கைது செய்தனர்.
அடுத்த கட்டுரையில்