திருச்சி உஷா வழக்கு : ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:52 IST)
திருச்சியில் கர்ப்பிணி உஷா மரணமடைய காரணமாக இருந்த ஆய்வாளர் காமராஜுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 
திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து  காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அப்போது உஷா கர்ப்பிணியாக இருந்தார் எனவும் தகவல் பரவியது.   
 
அந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்குமாறு காமராஜ் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காமராஜ் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு அளித்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்