பாடகர் கோவனின் போலீஸ் காவல் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (21:25 IST)
தமிழக அரசுக்கு எதிராக "மூடு டாஸ்மாக்" என்ற பாடலை படிய பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.


 
 
இது தொடர்பாக மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனை அவசர வழக்காக இன்று உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் கோவனுக்கு தொடர்பு இல்லை என அவரது தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார். இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வம், கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு தடைவிதித்ததுடன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
 
இதற்கு முன்பாக தமிழக அரசின் மதுக்கொள்கைகளுக்கு எதிராக மூடு டாஸ்மாக்கை என்ற பாடலை பாடிய கோவனை தேச தூரோக வழக்கில் திருச்சியில் கைது செய்த போலீசார், அவரை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது