உடுமலை பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை, மூன்றுபேர் கொண்ட கும்பர் அரிவாளால் வெட்டியது. இதில் கணவர் உயிரிழந்துள்ளார், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது குமரலிங்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சங்கர். பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சங்கர் படித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கௌசல்யா. குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தார்.
அப்போது, கெளசல்யாவும், சங்கருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு, கௌசல்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்த எதிர்ப்பையும் மீறி, சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழைமை இந்த தம்பதியினர் உடுமலைக்கு வந்துள்ளனர். அங்கு, மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருள்களைக் வாங்கிக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், இத்தம்பதியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைத் தொடந்த அந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில், சங்கர் மற்றும் கௌசல்யா இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படனர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சங்கர் உயிரிந்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கௌசல்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்வம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொலை சம்வத்தில் கௌசல்யாவின் தாய்மாமன் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜாதி வெறி காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த காதல் தம்பதியை பின்தொடர்நது அவர்கள் மீது தாககுதல் நடத்தும் நோக்கில் அந்த கும்பல் நோட்டமிடுவது அப்பகுதியின் சி.சி.டி கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.