நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.15 லட்சம் அபராதமாக வசூல்!

Webdunia
புதன், 19 மே 2021 (12:35 IST)
ஊரடங்கை மீறிய காரணத்திற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
இருப்பினும் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் சென்னையில் மாலை 6 மணி வரை காவல் துறையினர் சாலைகளில் தடுப்புகளை அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஊரடங்கை மீறியதாக 3,4315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,044 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 
 
இதோடு, ஊரடங்கை மீறி திறந்து வைக்கப்பட்ட 49 கடைகள் மூடப்பட்டன. இந்த கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.8,59, 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.6, 67,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஊரடங்கை மீறி கடைகளை திறந்திருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து மொத்தமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்