ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (19:10 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீடிப்பதாக சற்றுமுன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரையரங்குகள் பள்ளி கல்லூரிகள் மது பார்கள் திறக்க தடை தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தமிழக அரசின் விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதை கவனமாக கவனிக்க வேண்டும் என்றும் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்
 
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் மூன்றாவது அலையை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்