பருவமழையால் தள்ளிப்போகிறதா உள்ளாட்சித் தேர்தல் ?

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (09:06 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துள்ளதால் நவம்பரில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

இதனால் நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பெட்டிகள் கேட்டு கடிதம் எழுதியது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைப் பெய்து வருவதால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்