மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு- மதுபான பிரியர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (14:13 IST)
தமிழகத்தில் மதுபானங்களை அரசே விற்பனைசெய்து வரும் நிலையில், இன்று முதல் மதுபானங்களில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசே டாஸ்மாக் கடைகளை  நடத்தி மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது.

சமீபத்தில் மதுபானம் ஒன்றிற்கு குறிப்பிட்ட அளவில் அதிகம் வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து,  இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகம்  நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலை உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை அதிகரித்துள்ளது.

மதுபானங்களின் விலை இன்று முதல் அமலுக்கு வரும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதால் மதுபான பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்