திருட்டு வழக்கில் திடுக்! சரண்டரான சுரேஷ்; போலீஸுக்கு தண்ணி காட்டும் முருகன்...

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (11:25 IST)
லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சுரேஷ் போலீசில் சரணடைந்துள்ளான். 
 
சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போனது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனைத் தொடர்ந்து திருவாரூரில் மணிகண்டன் என்பவரை போலீஸார் 5 கிலோ நகைகளுடன் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து திருடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு தலைவனாக செயல்பட்டது முருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சுரேஷின் தாய் கனகவல்லியையும் போலீஸார் சிறையில் அடைத்துள்ள நிலையில், முருகனின் அண்ணன் மகன் முரளி கைதானான். இதுவரை இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் திருவாரூரில் தப்பி ஓடிய சுரேஷ் இன்று திடீரென செங்கம் கோர்ட்டில் சரணடைந்திருக்கிறார். இது இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக இருந்தாலும் இன்னும் கொள்ளைக்கு மூளையாக செயல்ப்பட்ட முருகன் இன்னும் கைது செய்யப்படவில்லை. 
 
எனவே, சுரேஷை விசாரிக்கும் வகையில் விசாரித்து எப்படியும் விரைவில் முருகனையும் போலீஸார் கைது செய்துவிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்