காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவி என்பவரை ஐட்டம் என மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான கமல்நாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது
மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கமல்நாத், ‘பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை ஐட்டம் என கேவலமாக விமர்சனம் செய்தார். இமார்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவியவர் என்பதால் ஆத்திரத்தில் அவர் அவ்வாறு பேசியதாக தெரிகிறது
இமார்த்தி தேவி பெயரை அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் அந்த தொகுதியின் வேட்பாளர் அவர் தான் என்பதால் அவரை கூறியது போல் தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் ஒரு பெண் தலைவரை ஐட்டம் என கூறிய கமல்நாத்துக்கு சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்நாத் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைவதோடு காணாமல் போகும் என பாஜக உணர்ந்துவிட்டது. 15 ஆண்டுகால ஆட்சியில் உண்மையான விஷயங்களிலிருந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். நான் அவமரியாதையான கருத்தை சொல்லிவிட்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். எந்த கருத்து? நான் பெண்களை மதிப்பவன். நான் கூறிய கருத்து அவமதிப்பதாக யாராவது கருதினால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்