ஆனாலும் தீபா சொரிமுத்துவுடனான பழக்கத்தை தீபா நிறுத்தவில்லை. கடந்த 20 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு தீபா, தன் கணவர் வெளியூர் சென்றிருந்த போது சொரிமுத்துவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது தீபாவின் எண்ணுக்கு அந்தோனி கால் செய்ய, குழந்தை கையில் போன் இருந்ததால் அவன் அதை எடுத்துப் பேசியுள்ளான். அப்போது குழந்தை உண்மயை சொல்லியதோடு மட்டுமில்லாமல் சொரிமுத்துவையும் வீடியோ காலில் காட்டியுள்ளார்.
இதனால் மாட்டிக்கொண்ட ஆத்திரத்தில் குழந்தையை கொடூரமாகத் தாக்கியுள்ளார் சொரிமுத்து. இதில் அவன் மயக்கமடைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த அந்தோனி மற்றும் அவரது உறவினர்கள் சொரிமுத்துவிடம் தகராறு செய்ய அவர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார்.