இதனையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமுல்யாவை கொலை செய்தால் பத்து லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு அறிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது
இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் ஸ்ரீராம் சேனாவின் ஸ்ரீராம் சேனா அமைப்பின் உறுப்பினர் கூறுகையில், ‘மத்திய மாநில அரசுகள் அமுல்யாவை ஒருபோதும் விடுதலை செய்துவிடக் கூடாது என்றும் அப்படி அந்த பெண்ணை விடுதலை செய்தால் நாங்கள் படுகொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் அவரை கொலை செய்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.