தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேசிய போது “ஆரம்பம் முதலே பாஜகவின் திட்டங்கள் பல எனக்கு பிடித்திருந்தன. ஆனால் காங்கிரஸில் இருப்பதாலேயே அவற்றை எதிர்த்தேன். ரபேல் விவகாரத்தில் கூட ராகுல் காந்தி அதை எதிர்த்ததால் தான் நானும் எதிர்த்தேன். எல்லாருக்கும் ஒரு காலக்கட்டத்தில் மாற்றம் வரும். பாஜகவில் பல்வேறு திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக எனக்கு தோன்றிய நிலையில் அதில் இணைவதுதான் சரி என புரிந்து கொண்டேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.