இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்கனவே இன்று காலை 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.