மருத்துவமனைக்கு விரையும் கருணாநிதியின் குடும்பத்தினர் - மீண்டும் பதட்டம்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (10:29 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் இன்று மாலை மீண்டும் காவேரி மருத்துவமனையில் ஒன்று கூடியுள்ளனர்.

 
கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். மேலும், திமுக தொண்டர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. 
 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் நிலை, சிகிச்சைக்கு எவ்வாறு ஒத்துழைக்கின்றனது என்பது பொறுத்தே கணிக்க முடியும் என நேற்று மருத்துவ அறிக்கை வெளியிட்டது. ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாசலின் முன்பு கூடியுள்ளனர்.
 
நேற்று இரவு 10.30 மணியளவில் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றார். ஆனால், 11 மணியளவில் வீட்டிற்கு சென்ற கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். இதனால், நேற்று இரவு ஒருவித பதட்டம் நிலவியது. அதன்பின் இன்று காலை கனிமொழி வீட்டிற்கு திரும்பி சென்றார். 
 
இந்நிலையில், இன்று காலை ஸ்டாலின். ஆர்.ராசா, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து கருணாநிதியின் மற்ற உறவினர்களும் மருத்துவமனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்