திமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு சற்றுமுன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அப்பல்லோ மருத்துவமனை எந்தவித அறிக்கையையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.