காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

Webdunia
சனி, 28 மே 2016 (06:22 IST)
தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்க மறுப்பதோடு, காவிரியில் புதிய அணை கட்டி வரும் கர்நாடக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இத்துடன், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டுவோம் எனக் கர்நாடக அரசு கூறி வருகிறது.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளதாவது:-
 
கோவையில் பேட்டியளித்த கர்நாடக உணவுத் துறை அமைச்சர் திணேஷ் குண்டுராவ், "காவிரியின் உபரிநீரைத் தேக்க மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டுப்படுகிறது. இதில் எவ்வித விதிமீறலும் இல்லை' என்று கூறியுள்ளார். அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லையா? 
 
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? என்பது குறித்து விளக்கமளித்திட வேண்டும்.
 
தடுப்பணை கட்டுவோம் என்று கூறி வந்தவர்கள், இப்போது கட்டப்படுவதாக அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கமளிக்க வேண்டும்.
 
இதற்கு எந்தக் காரணத்தை கொண்டும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்