கவர்னர் பதவியை விட்டுவிட்டு வந்ததால் பரிதாபப்பட வேண்டாம்.. தமிழிசை குறித்து கனிமொழி..!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:43 IST)
தமிழிசை சௌந்தரராஜன் கவர்னர் பதவியை விட்டுவிட்டு வந்ததால் பரிதாபப்பட்டு யாரும் ஓட்டு போட வேண்டாம் என்று திமுக எம்பி கனிமொழி தென் சென்னை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

 தென் சென்னை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது நான் கவர்னர் பதவியை எல்லாம் விட்டு விட்டு வந்தேன் அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று தமிழிசை சொன்னால் பரிதாபப்பட்டு யாரும் ஓட்டு போட்டு விட வேண்டாம்

தமிழிசை கவர்னர் பதவியை விட்டுவிட்டு வரவில்லை, தென்சென்னை தொகுதியில் போட்டியிட யாரும் இல்லை என்பதால் அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அவரை பாஜக வேட்பாளர் ஆக்கியுள்ளது

 பாஜகவால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை, பயனும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கனிமொழி பேசினார். தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்காது, ஆனால் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் தான் வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், வேறு யாரும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று அவர் பேசினார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்