பெண்களுக்கு நாப்கின் கொடுங்கள் – மகளிரணி நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்த கனிமொழி!

Webdunia
திங்கள், 11 மே 2020 (07:20 IST)
திமுகவின் மகளிரணித் தலைவி கணிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாகப் பேசியுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் திமுக ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அறிவுறுத்தி வருகிறார்.

இப்போது அதே பாணியை திமுக மகளிரணித் தலைவி கனிமொழியும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். நேற்று மகளிரணி நிர்வாகிகளிடம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன எனக் கேட்டறிந்த கனிமொழி ‘கிராமப் புற பெண்களுக்கு இப்போது நாப்கின் கிடைப்பது கடினமாக இருக்கும். எனவே நலத்திட்ட உதவிகளோடு நாப்கினும் சேர்த்துக் கொடுங்கள்’ என சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்