அநீதியான நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:39 IST)
இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் இது அநீதியானது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வுக்கு கடந்த சில ஆண்டுகளாக பலமான எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக ஆட்சியமைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டாலும் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

இன்று நடப்பு ஆண்டு நீட் தேர்வு தொடங்கும் நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்