கண்ணா ரெண்டு லட்டா... கமலுக்கு ஜாக்பாட்டா ?

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (10:29 IST)
கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் நேற்று கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 
 
அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்