தண்ணிர் திறந்துவிட்ட குமாரசாமிக்கு நன்றி சொன்ன கமல்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (18:58 IST)
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஒரு சொட்டு தண்ணீரை கூட தமிழகத்திற்கு தர மாட்டோம் என்று கூறிய கர்நாடக அரசு கடந்த இரண்டு நாட்களாக கபிணி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவை விட இயற்கை விடுத்த உத்தரவுக்கு அஞ்சியே கபிணியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் கனமழை பெய்ததால் கபினி அணை நிறைந்துவிட்டது. இனிமேலும் தண்ணீரை தேக்கி வைத்தால் அணைக்கு ஆபத்து என்பதை அறிந்த கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட்டது. இந்த உபரி நீர்தான் தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுதான். கனமழை பெய்த போது மட்டும் காவிரியில் இருந்து தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடும்
 
இந்த நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வருக்கு கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'கபிணியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதற்காக கர்நாடக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்து கொண்டேன். காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநில நட்பால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கமல் தனது டுவிட்டில் கூறியுள்ளார். 
 
தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களையும் நியமிக்கலாமே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்