கார்த்தி திரைப்படத்திற்கும் கமலின் டார்ச் லைட்டிற்கும் உள்ள ஒற்றுமை!

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (08:23 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த டார்ச் லைட் தமிழகத்தை இருளை அகற்றும் சின்னம் என கமல் தனது சின்னம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
 
இந்த நிலையில் கார்த்தி நடித்த 'சகுனி' என்ற படத்தில் அவர் ஒரு அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார். அந்த சின்னமும் டார்ச்லைட் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அந்த படத்தில் கார்த்தி, கமல் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் அவரது ஆதரவு பெற்ற கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்செயலாக நிகழ்ந்த இந்த ஒற்றுமை குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக கமல் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 'சகுனி' படத்தில் வருவதுபோல் டார்ச்லைட் உதவியுடன் கமல்ஹாசன் வரும் தேர்தலில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்