தமிழக அரசுக்கு கமல் வைத்த வேண்டுகோள்

சனி, 28 மார்ச் 2020 (20:26 IST)
தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு சீரிய முறையில் சிறப்பாக செய்து வருகிறது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரவும் பகலும் பம்பரமாக சுழன்று கொரோனா வைரஸுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது முயற்சியின் பேரில் தான் தமிழகத்தின் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்