மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா!

சனி, 28 மார்ச் 2020 (19:49 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் ரூ 500 கோடி நிதி உதவி செய்தது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இதனையடுத்து டாடா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது
 
இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தொழிலதிபர்களும், பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவு தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசுக்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார் 
 
இந்த நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற டாட்டா நிறுவனம் உடனடியாக மேலும் ரூபாய் ஆயிரம் கோடி நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து டாடா நிறுவனம் மட்டுமே ரூபாய் ஆயிரத்து 500 கோடி நிதியுதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் மட்டுமே ரூபாய் 1500 கோடி நிறுவனம் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்கு இந்த மிகப்பெரிய தொகையை மிகப்பெரிய பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்