ஓவியம் வரைந்து பொழுதை போக்கும் பிரபல தமிழ் நடிகை

சனி, 28 மார்ச் 2020 (20:05 IST)
ஓவியம் வரைந்து பொழுதை போக்கும் பிரபல தமிழ் நடிகை
உலக வரலாற்றிலேயே கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது தற்போது தான் என்பதும் இதற்கு காரணம் கொரோனா வைரஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை சாப்பிடாமல், தூங்காமல் பிசியாக ஓய்வே இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்த பலர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து தங்கள் குடும்பத்துடன் பொழுதை போக்கி வருகின்றனர் 
 
அதுமட்டுமின்றி தொழிலில், வேலையில் ஏற்பட்ட பிசி காரணமாக பலர் தங்களுக்குள் மறைத்து வைத்திருந்த திறமைகளையும் தற்போது வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை மஹிமா நம்பியார் தற்போது ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் 
 
இவர் தனது வீட்டின் சுவற்றில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். மஹிமா ஓவியம் வரையும்  வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மஹிமா நம்பியார் கூறியதாவது: தனிமைப்படுத்திக் கொள்வதை பயன்படுத்தி இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார். நீங்களும் ஓவியராக மாற வேண்டுமா? உங்களுக்கு தேவை ஒரு சுவர், ஒரு பென்சில் மட்டுமே’ என்று பதிவு செய்துள்ளார்
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Quarantine brings out the Picasso in me

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்