வெளிநாடு செல்லும் கமல்ஹாசன்.. அதற்குள் திமுகவுடன் பேச்சுவார்த்தையா?

Siva
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (14:59 IST)
மணிரத்னம் இயக்கி வரும் ’தக்லைப்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் வரும் 29ஆம் தேதி வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில் அதற்குள் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அக்கட்சிக்கு திமுக ஒன்று அல்லது இரண்டு தொகுதி கொடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வரும் நிலையில் வரும் 28ஆம் தேதி கமல்ஹாசனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 
’தக்லைப்’ படத்தின் படப்பிடிப்புக்காக 29ஆம் தேதி கமல்ஹாசன் வெளிநாடு செல்வதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாகவே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
திமுக கூட்டணியில் இணையும் கமல்ஹாசன் கட்சிக்கு கோவை அல்லது தென்சென்னை அல்லது இரண்டு தொகுதிகளும் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்